அமெரிக்க கொடி நாள் – ஜூன் 14
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 அமெரிக்காவில் கொடி தினமாக கொண்டாடப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன் அவர்களால் இத்தினம் பிரகடனப்படுத்தப் பட்டது. இந்த நாள் அமெரிக்காவின் உத்தியோகபூர்வ கொடியாக நட்சத்திரங்கள் மற்றும் கோடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூருகிறது.
அனைத்து நாசா விண்கலங்களிலும் அமெரிக்க கொடி பதிக்கப்பட்டு இருக்கின்றது. பல தசாப்தங்களாக (decades), அமெரிக்க நாட்டின் கொடி சந்திரனில் வைக்கப்பட்டுள்ளது, interstellar space ற்கு (நட்சத்திரங்களுக்கு இடையிலான விண்வெளி) செல்கிறது, செவ்வாய் கிரகத்தில் நடமாடும் ரோவர்களுடன் சென்றுள்ளது, மற்றும் space suites ல் (விண்வெளி உடைகளில்) இடம்பெற்றுள்ளது.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க படத்தில், மிஷன் கமாண்டர் ஜான் யங், நிலவில் குதித்துக் கொண்டே கொடிக்கு வணக்கம் செலுத்துகிறார்! அப்பல்லோ 16 ஓரியன் லூனார் மாட்யூல் (Orion Lunar Module) மற்றும் லூனார் ரோவிங் வெஹிகிள் (Lunar Roving Vehicle) பின்னணியில் உள்ளன.
Orion Lunar Module – ஓரியன் லூனார் மாட்யூல் – நிலவில் இறங்கும் வாகனப் பகுதி
Lunar Roving Vehicle – லூனார் ரோவிங் வெஹிகிள் – நிலவில் உலாவும் வாகனம்