அமைதியான சூப்பர்சோனிக் டெக்னாலஜி
நாசாவின் எக்ஸ் -59 அமைதியான சூப்பர்சோனிக் டெக்னாலஜி விமானம் சோனிக் பூம் (Sonic Boom) ஐ உருவாக்காமல் ஒலியின் வேகத்தை விட வேகமாக பறக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒலியின் வேகத்தைவிட அதிக வேகத்தில் விமானம் பயணிக்கும்போது ஏற்படும் உரத்த சத்தம் சோனிக் பூம் (Sonic Boom) என்று அழைக்கப் படுகிறது. இந்த சத்தம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையூறு விளைவிக்கும் உரத்த, திடுக்கிடும் சத்தம். இந்த காரணத்தால் தற்போது வணிக விமானங்கள் ஒலியின் வேகத்தை விட வேகமாக பறக்க அனுமதிக்கப்படுவது இல்லை.
நாசாவின் இந்த சோதனை விமானம் ஜெட் விமானத்தை விட இருமடங்கு வேகத்தில் பறக்கும். அதே நேரத்தில் விமானத்தின் சத்தத்தை அமைதியாக “சோனிக் தம்ப்” வரை வைத்திருக்கும். அதாவது விமானம் சூப்பர்சோனிக் வேகத்தில் பறக்கும் போது தரையில் எந்த சத்தமும் கேட்காது.
எக்ஸ் -59 இன் வடிவமைப்பு எதிர்பார்த்த இரைச்சல் வரம்பிற்குள் செயல்படும் என்பதை உறுதிப்படுத்த, நாசா அதன் ஒப்பந்தக்காரரான லாக்ஹீட் மார்ட்டினுடன் நெருக்கமாக இணைந்து பல “computational fluid dynamics simulations” கொண்ட database ஐ உருவாக்குகிறது.