#Uncategorized

ஆர்ட்டெமிஸ் 1 ஸ்பேஸ் லாஞ்ச் சிஸ்டம் கோர் ஸ்டேஜ் லிஃப்ட் மற்றும் மேட்

Source: Artemis I Space Launch System Core Stage Lift and Mate | NASA

SLS ராக்கெட்டின் மிகப் பெரிய பகுதி “Core Stage” (கோர் ஸ்டேஜ்) என்பதாகும். நான்கு RSS-25 (ஆர்எஸ் -25) என்ஜின்கள் Core Stage உடன் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த என்ஜின்கள் SLS ராக்கெட் ஏவுதல் மற்றும் ஏறும் போது 2 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் உந்துதலை வழங்கும்.

ராக்கெட்டின் உந்துதலை மேலும் வலுப்படுத்த திட எரிபொருள் மூலம் இயங்கும் இரண்டு பூஸ்டர்கள் கோர் ஸ்டேஜ் உடன் இணைக்கப்பட்டு இருக்கும். இதனால் மொத்தம் 8.8 மில்லியன் பவுண்டுகள் உந்துதல் கிடைக்கும்.

இப்படத்தில் SLS ராக்கெட்டின் கோர் ஸ்டேஜை மொபைல் லாஞ்சரில், இரட்டை திட எரிபொருள் ராக்கெட் பூஸ்டர்களுக்கு இடையில் இறக்கி இணைகிறார்கள். புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள வாகன இணைப்பு கட்டிடத்தில் இப்பணி நடைபெறுகிறது.

ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் கீழ், நாசா முதல் பெண் மற்றும் “வண்ணத்தின் முதல் நபரை” (People of color) சந்திரனில் தரையிறக்கும். அதே போல் செவ்வாய் கிரகத்திற்கு மனித பயணங்களைத் தயாரிப்பதற்காக சந்திர மேற்பரப்பில் ஒரு நிலையான இருப்பை நிறுவும்.