#Uncategorized

ஓரியன் விண்கலம் SLS ராக்கெட்டுடன் இணைந்தது

நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள பொறியாளர்கள் ஓரியன் விண்கலத்தைத் தூக்கி SLS ராக்கெட்டின் முகட்டில் வைத்து சோதனைக்கான அசெம்பிளியை முடித்தனர். அக்டோபர் 21, 2021 ல் ஓரியன் விண்கலம், அதன் லான்ச் அபார்ட் சிஸ்டத்துடன் (launch abort system) பாதுகாப்பாக இணைக்கப்பட்டது.

322 அடி உயரமுள்ள சந்திர ராக்கெட் வானில் ஏவப்படுவதற்கு முன்னர், பொறியாளர்கள் தொடர்ச்சியாக சோதனைகளை நடத்தத் தொடங்குவார்கள்.

ஆர்ட்டெமிஸ் I என அழைக்கப்படும் இந்த பணி மூலம் நாசா நிறுவனம் சந்திரனின் மேற்பரப்பில் முதல் பெண் மற்றும் முதல் நிற நபரை தரையிறக்கும். சந்திரனில் மேற்கொள்ளும் பல ஆய்வுகள் நாம் செவ்வாய் கிரகத்தை சென்றடைய வழி வகுக்கும்.

Source: Orion Spacecraft Joins Artemis I Moon Rocket at Kennedy | NASA