#Uncategorized

நாசாவின் லூசி விண்கலம் கென்னடியில் ஏவத் தயாராக உள்ளது

ஆகஸ்ட் 11, 2021 – லூசி விண்கலம் இப்போது புளோரிடாவில் உள்ளது. லூசி விண்கலம் வியாழன் ட்ரோஜன் சிறுகோள்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும். தென் கரோலினாவில் உள்ள சார்லஸ்டன் விமானப்படை தளத்தில் இருந்து விமானப்படையின் C-17 சரக்கு விமானம், விண்கலத்தை எடுத்துச் செல்ல கொலராடோவின் அரோராவில் உள்ள பக்லி விண்வெளிப் படைத் தளத்திற்குச் சென்றது. ஜூலை 30, 2021 அன்று கென்னடி ஸ்பேஸ் சென்டரில் உள்ள ஏவு மற்றும் தரையிறங்கும் வசதி (Launch and Landing Facility) ஓடுபாதையில் லூசியுடன் பத்திரமாக விமானம் கீழே இறங்கியது. புறப்படுவதற்கு முன் இறுதி ஆயத்தங்களை மேற்கொள்வதற்காக அருகிலுள்ள டைட்டஸ்வில்லில் உள்ள ஆஸ்ட்ரோடெக் ஸ்பேஸ் ஆபரேஷன்ஸ் செயலாக்க வசதிக்கு விண்கலம் கொண்டு செல்லப்பட்டது.

லூசி என்ற புதைபடிவ மனிதனின் எலும்புக்கூடு, மனிதகுலத்தின் பரிணாம வளர்ச்சியில் ஆராய்ச்சியாளர்களுக்கு நுண்ணறிவை வழங்கியது. இந்த விண்கலத்திற்கும் லூசியின் பெயரே சூட்டப்பட்டுள்ளது. லூசி விண்கலமும் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு நமது சூரிய மண்டலத்தின் தோற்றத்தை பற்றி பல தகவல்களை வழங்கும்.

ட்ரோஜன் சிறுகோள்கள் இரண்டு குழுக்களாக சூரியனைச் சுற்றி வருகின்றன: ஒரு குழு வியாழனுக்கு முன்னால் உள்ளது, மற்றொன்று பின்னால் செல்கிறது. சூரியன் மற்றும் வியாழன் ஆகிய இருவராலும் நிலைப்படுத்தப்பட்டு, சிறுகோள்களின் அந்த திரள்கள் சூரிய குடும்பத்திற்குள் கோள்களை உருவாக்கிய ஆரம்பப் பொருளின் மீதங்கள் என்று கருதப்படுகிறது. பணியின் காலம் முழுவதும், லூசி 12 ஆண்டுகளில் எட்டு வெவ்வேறு சிறுகோள்களைப் பார்வையிடும். நமது ஆரம்பகால சூரிய குடும்பத்தை உருவாக்கிய பழமையான பொருள்கள் பற்றிய புதிய தகவல்களைத் தரும்.

லூசி யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் அட்லஸ் V ராக்கெட்டில் கேப் கனாவெரல் ஸ்பேஸ் ஃபோர்ஸ் ஸ்டேஷனில் இருந்து அக். 16 அன்று ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை அமெரிக்காவின் மல்டி-யூசர் ஸ்பேஸ்போர்ட்டான கென்னடியில் உள்ள நாசாவின் ஏவுதல் சேவைகள் திட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது. ட்ரோஜான்களைப் படிக்கும் முதல் பணியாக இருக்கும்.