#Uncategorized

மார்ஸ் கிரகத்தின் அட்மோஸ்பியர் (காற்று மண்டலம்)

உயிரினங்கள் வாழ காற்று மிக மிக அவசியம். நம்மை சுற்றிலும் காற்று நிறைந்துள்ளது. நைட்ரோஜன், ஆக்சிஜென் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் நமது காற்று மண்டலத்தில் நிறைந்து காணப்படுகிறது. நாம் உயிர்வாழ ஆக்சிஜனை சுவாசிக்கிறோம். அது போல தாவரங்கள் கார்பன் டை ஆக்ஸைடை சுவாசிக்கின்றன.

நாம் மற்ற கிரகங்களில் வாழ்வதற்கு பூமியைப் போன்ற அதே சூழ்நிலை நமக்கு தேவை. மார்ஸ் கிரகம் கிட்டத்தட்ட பூமியை போல இருக்கிறது. அதனால்தான் மார்ஸ் கிரகத்திற்கு செல்ல மனிதர்கள் கடுமையான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மார்ஸில் காற்று இருக்கிறதா?

1964 ஆம் ஆண்டு மரைனீர்-4 என்ற விண்கலத்தை நாசா மார்ஸிற்கு அருகாமையில் அனுப்பியது. மார்ஸில் காற்று இருப்பதை அந்த விண்கலம் உறுதி செய்தது. மேலும் மார்ஸில் காற்று மண்டலத்தில் பெரும்பாலும் கார்பன் டை ஆக்ஸைடே நிறைந்துள்ளது என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின்னர் 1976 ஆம் ஆண்டு வைகிங் ப்ரோக்ராம் மூலம் இரண்டு விண்கலங்கள் மார்ஸில் தரையிறங்கி அதன் காற்று மண்டலத்தை ஆராய்ச்சி செய்தன.

மார்ஸின் காற்று மண்டலத்தில் என்னென்ன வாயுக்கள் நிறைந்துள்ளன?

  • கார்பன் டை ஆக்ஸைடு
  • நிட்ரோஜென்
  • ஆர்கான்
  • ஆக்சிஜென் மற்றும் ஓசோன்
  • நீராவி
  • தூசி
  • மீதேன்
  • சல்பர் டை ஆக்ஸைடு

மார்ஸில் எவ்வளவு காற்று அழுத்தம் உள்ளது ?

பூமியை ஒப்பிடும்போது மார்ஸின் காற்று மண்டலம் மிக மெலிதானது. அதனால் மார்ஸின் காற்று மண்டல அழுத்தம் மிக மிக குறைவாக காணப்படுகிறது.