#Uncategorized

மார்ஸ் ஹெலிகாப்டர்

க்யூரியாசிட்டி (curiosity) மற்றும் பெர்ஸெவேரன்ஸ் (perseverance) என இரண்டு ரோவர்கள் (rovers) தற்போது மார்ஸில் நடமாடி வருகின்றன. மார்ஸின் தரையில் ரோவர்களை இயக்குவதில் பல சிக்கல்கள் உள்ளன. ரோவர்களுக்கு பதிலாக நம்மால் ட்ரோன்களை (drones) மார்ஸில் இயக்க முடியுமானால் நமது ஆராய்ச்சிகளை இன்னும் துரிதப்படுத்த முடியும்.

மார்ஸின் காற்று மண்டலம் பூமியை விட மெலிதானது. அதே போல காற்று அழுத்தம் மிக மிக குறைவு. இந்த சூழ்நிலையில் ட்ரோன்கள் அல்லது ஹெலிகாப்டர்கள் மார்ஸில் பறக்க முடியுமா என்ற கேள்விகளுக்கு விடைகளை கண்டுபிடிக்கவே இன்ஜெனுய்ட்டி என்னும் சிறிய ஹெலிகாப்டரை மார்ஸிற்கு நாசா அனுப்பியுள்ளது.

பெயர்இன்ஜெனுய்ட்டி (Ingenuity)
முக்கிய வேலைமார்ஸ் காற்றுமண்டலத்தில் பறக்க முடியுமா என ஆராய்ச்சி செய்ய அனுப்பப் பட்ட முதல் ஹெலிகாப்டர். இது பெர்ஸெவேரன்ஸ் ரோவருடன் இணைக்கப்பட்டு மார்ஸிற்கு சென்றது.
பூமியில் இருந்து ஏவப்பட்ட நாள், இடம்ஜூலை 30, 2020,
கேப் கனாவெரல் விமானப்படை நிலையம், புளோரிடா
மார்ஸில் இறங்கிய நாள், இடம்பிப்ரவரி 18, 2021,
ஜெஜீரோ பள்ளம், செவ்வாய்
எவ்வளவு நாள் மார்ஸில் இருக்கும்மூன்று சோதனைகள் மட்டுமே முதல் திட்டத்தில் இருந்தது. ஆனால் மூன்று சோதனைகளுக்கு பிறகு மார்ஸ் சூழ்நிலையில் ஹெலிகாப்டரால் பறக்க முடியும் என ஆராய்ச்சி முடிவு வந்தது. எனவே இன்ஜெனுய்ட்டி தொடர்ந்து மார்ஸில் பறக்கிறது.

முக்கிய நோக்கம்

  1. மார்ஸின் மெல்லிய காற்றுமண்டலத்தில் பறக்க முடியும் என நிரூபித்தல். இந்த சிவப்பு கிரகத்தில் க்ராவிட்டி (புவியீர்ப்பு விசை) பூமியை விட மூன்று மடங்கு மிக குறைவு. இதனால் லிப்ட் (lift) எனப்படும் மேல்நோக்கு உந்து விசையை உறைவாக்குவது கடினம்.
  2. சிறிதாக்கப்பட்ட பறக்கும் தொழில்நுட்பங்களை செயல்படுத்தி டெமோ காண்பித்தல். ஹெலிகாப்டருடன் இணைந்துள்ள கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இதர பாகங்களின் அளவு சிறிதாக்கப்பட வேண்டும். இதனால் ஹெலிகாப்டரின் எடை இலகுவாகி பறக்க சாத்தியமாகும்.
  3. தன்னிச்சையாக ஹெலிகாப்டரை இயக்குதல். பொதுவாக பூமியில் இருந்து ஒரு ஆபரேட்டர் குழு மார்ஸின் ரோவர்களை இயக்கும். அவ்வாறு இல்லாமல், சுயமாகவே செயல்படும் வகையில் இன்ஜெனுய்ட்டி செயல்படும். சூரிய ஒளியின் மூலம் தனது பேட்டரிகளை சார்ஜ் செய்து கொள்ளும். இரவு நேர மார்ஸ் கடுங்குளிரை சமாளிக்க தனது ஹீட்டர்களை உபயோகித்து கொள்ளும். எங்கு பறக்க வேண்டும், என்ன டேட்டா சேகரிக்க வேண்டும் என்ற தகவல்களை பூமியில் இருந்து பெற்று கொண்டு, தானாகவே இயங்கி அவற்றை சேகரித்து கொடுக்கும்.

அளவு:

உயரம்: 19 இன்ச் (0.49 மீட்டர்)
காற்றாடிகள் நீளம்: 4 அடி (1.2 மீட்டர்)

முக்கிய தன்மைகள்:

  • எடை: 4 பவுண்டுகள் (1.8 கிலோ)
  • சூரிய ஒளியால் இயங்கும். பேட்டரிகளை சார்ஜ் செய்துகொள்ளும்.
  • வயர்லெஸ் முறையில் தகவல் தொடர்பு கொள்ளும்
  • காற்றாடிகள் நிமிடத்திற்கு 2400 முறை சுற்றும்
  • கம்ப்யூட்டர், பயண சென்சார்கள் மற்றும் இரண்டு கேமராக்கள் (ஒன்று கலர் மற்றோன்று கருப்பு வெள்ளை) ஹெலிகாப்டருடன் இணைந்து இருக்கும்